×

நாட்டார் கதையை சொல்லும் தி டார்க் ஹெவன்

சென்னை: மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் நடக்கும் தொடர் கொலைகளை பற்றிய படம், ‘தி டார்க் ஹெவன்’. இது வரும் ஏப்ரல் 3ம் தேதி திரைக்கு வருகிறது. சமூகத்திலுள்ள நாட்டார் கதையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள கிரைம் திரில்லர் படம் இது. சித்து, தர்ஷிகா, நிழல்கள் ரவி, வேல.ராமமூர்த்தி, சாப்ளின் பாலு, ரித்விகா, அருள் ஜோதி, ஜெயகுமார் ஜானகிராமன் நடித்துள்ளனர். பி.கே.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்ய, ‘ஜாக்கி’ சக்தி பாலாஜி இசை அமைத்துள்ளார். ராஜா ஆறுமுகம் எடிட்டிங் செய்துள்ளார். படம் குறித்து இயக்குனர் பாலாஜி கூறுகையில், ‘தடயங்களே இல்லாமல் நடக்கும் தொடர்ச்சியான கொலைகளை, ஒரு காவல் அதிகாரி எப்படி கையாள்கிறார் என்பதை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளது. வண்டிபெரியார், அச்சன்கோவில், தென்மலை, ஏற்காடு, பத்துகாணி, தென்காசி, முக்கூடல் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது’ என்று சொன்னார்.

Tags : Chennai ,Makerai ,Sidhu ,Darshika ,Nizhalgal Ravi ,Vela Ramamoorthy ,Chaplin Balu ,Rithvika ,Arul Jyothi ,Jayakumar Janakiraman ,P.K. Manikandan ,Jackie' Sakthi Balaji ,Raja Arumugam ,
× RELATED கிளாமருக்காக கயாடு எடுத்த திடீர் முடிவு