×

சம்பள விஷயத்தில் நயன்தாரா கறார்: பாலகிருஷ்ணா படத்தில் இருந்து நீக்கப்பட்டாரா?

சென்னை: தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவின் ‘சிம்ஹா’, ‘ஸ்ரீராம ராஜ்யம்’, ‘ஜெய் சிம்ஹா’ ஆகிய படங்களில் அவரது ஜோடியாக நடித்தவர், நயன்தாரா. இந்த ஜோடிக்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது பாலகிருஷ்ணா நடிக்கும் 111வது படத்தை கோபிசந்த் மலினேனி இயக்கி வருகிறார். இதில் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக தகவல் வெளியானது. ‘என்பிகே 111’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படம், வரலாறு சம்பந்தப்பட்ட கதையுடன் உருவாகிறது. 4வது முறையாக பாலகிருஷ்ணா, நயன்தாரா இணைந்து நடிப்பதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்படத்தில் நடிக்க நயன்தாரா 11 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும், அதனால் அவரை விட சம்பளம் குறைவாக வாங்கும் ஒருவரை ஹீரோயினாக நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இதற்காக படத்தின் கதையில் சில மாற்றங்களை கோபிசந்த் மலினேனி செய்துள்ளார். ஆனால், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைக்கு பிறகு நயன்தாரா கேட்ட சம்பளத்தை தயாரிப்பு நிறுவனம் கொடுக்க முன்வந்துள்ளதால், அடுத்தக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. இதனால் பாலகிருஷ்ணா, நயன்தாரா ஜோடி 4வது முறையாக இணைந்து நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : Nayanthara ,Balakrishna ,Chennai ,Gopichand Malineni ,
× RELATED கிளாமருக்காக கயாடு எடுத்த திடீர் முடிவு