×

கிளாமருக்காக கயாடு எடுத்த திடீர் முடிவு

தமிழில் பிரதீப் ரங்கநாதன் ேஜாடியாக ‘டிராகன்’ என்ற படத்தில் அறிமுகமான கயாடு லோஹர், தற்போது ‘இதயம் முரளி’, ‘இம்மார்ட்டல்’, ‘எஸ்டிஆர் 49’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே தெலுங்கில் ‘அல்லூரி’ என்ற படத்தில் நடித்திருந்த அவர், தற்போது ‘பங்கி’ என்ற படத்தில் விஷ்வக் சென் ஜோடியாக நடித்துள்ளார். திரைக்கு வந்துள்ள இப்படத்தில் அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

எதிர்மறை விமர்சனம் வந்தபோதும், கயாடு லோஹர் மிகச்சிறப்பாக நடித்துள்ளதாகவும், அவரது கவர்ச்சியான நடனம் இளம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளதாகவும் நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர். இதன்மூலம் தெலுங்கில் அதிக வரவேற்பு பெற்றுள்ள கயாடு லோஹர், தொடர்ந்து கிளாமருடன் கூடிய கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க முடிவு செய்துள்ளார்.

Tags : Kayadu ,Kayadu Lohar ,Pradeep Ranganathan ,Vishwak Sen. ,
× RELATED அவந்திகா அறிமுகமாகும் மலையாள ‘ஆரம்பம்’