×

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’

சென்னை: சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள படம், ‘தாய் கிழவி’. வரும் 27ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தை சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் வெளியாவதற்கு முன்பே சிவகார்த்திகேயன் நடிக்கும் 26வது படத்தை அவர் எழுதி இயக்கி வருகிறார். இப்படத்துக்கு ‘சேயோன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதில் துடிப்பு மிகுந்த அதிரடி யான வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். கிராமிய பின்னணியில் நமது மண் சார்ந்த உணர்வுகளுடன் அதிரடி காட்சிகள், பாடல்கள் என்று, குடும்பத்திலுள்ள அனைவரும் ரசிக்கும்படியான கமர்ஷியல் எண்டர்டெயினராக ‘சேயோன்’ உருவாக்கப்படுகிறது. ‘அமரன்’ படத்துக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல், டர்மரிக் மீடியா, ஆர்.மகேந்திரன் ஆகியோருடன் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளது, ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Sivakarthikeyan ,Kamal Haasan ,Chennai ,Radhika ,SK Productions ,Sivakumar Murugesan ,Santhosh Narayanan ,
× RELATED கிளாமருக்காக கயாடு எடுத்த திடீர் முடிவு