×

முக்கூடல் அருகே மாமனாரை மிரட்டிய மருமகன் கைது நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு ஜூலை 8ல் உள்ளூர் விடுமுறை

நெல்லை, ஜூலை 1: நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் தேர் திருவிழா வருகிற 8ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் சுகுமார் கூறியிருப்பதாவது: நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் தேர் திருவிழா வருகிற 8ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளதை முன்னிட்டு நெல்லை மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும். அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அன்று அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள், பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது. ஜூலை 8ம் தேதி உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும். இந்த உள்ளூர் விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது. மேலும், மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும். உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜூலை 19ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

The post முக்கூடல் அருகே மாமனாரை மிரட்டிய மருமகன் கைது நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு ஜூலை 8ல் உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Mukoodal ,Nellai ,Nellaiappar temple ,Anith Therottam ,Nellaiappar Gandhimati Amman temple chariot festival ,Collector ,Sukumar… ,Nellai district ,Nellaiappar ,temple Anith Therottam ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா