×

கிணற்றில் தவறி விழுந்தவர் மீட்பு

 

ஒட்டன்சத்திரம், ஜூன் 27: ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சிம்மாபட்டி காந்தி மார்க்கெட் பின்பகுதியில் ஏழுமலை என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் காளிமுத்து (26) என்பவர் கால் தவறி விழுந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்ததும் ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காளிமுத்துவை பத்திரமாக மீட்டனர்.

The post கிணற்றில் தவறி விழுந்தவர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Ottansatram ,Elumalai ,Tangachimmapati Gandhi Market ,Kalimuthu ,Ottansatram Fire Station ,
× RELATED மினி பஸ்சில் இறந்து கிடந்த மெக்கானிக்