காரிமங்கலம், ஜூன் 16: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த ராமாபுரம் பகுதியில் விநாயகர், ஐயப்பன் மற்றும் மாரியம்மன் கோயில்கள் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு பூஜையை முடித்துவிட்டு கோயில் பூசாரி கோயில் கதவை பூட்டி சென்றுள்ளார். நேற்று காலை கோவிலுக்கு பக்தர்கள் வந்த போது கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு, பக்தர்கள் காணிக்கை பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. மூன்று கோயில்களிலும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் உண்டியல் உடைக்கப்பட்டு, பக்தர்கள் காணிக்கை பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மூன்று கோயில்களில் உண்டியல் கொள்ளை appeared first on Dinakaran.
