×

உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

உளுந்தூர்பேட்டை, ஜூன் 14: உளுந்தூர்பேட்டையில் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்த காரில் இருந்து டிரைவர் இறங்கி ஓடி உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை விருத்தாசலம் சாலையில் நேற்று மாலை விருத்தாசலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி ஒரு ஆம்னி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென காரில் ஒயர்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த காரை ஓட்டிச் சென்ற டிரைவர் சரவணன் என்பவர் காரில் சிலிண்டர் உள்ளதாக கூறி இறங்கி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் நீண்ட வரிசையில் நின்றதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அனைத்து வாகனங்களும் அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவத்தால் உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

The post உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு திடீரென தீப்பிடித்து எரிந்த கார் appeared first on Dinakaran.

Tags : Ulundurpettai ,Ulundurpettai- ,Vriddhachalam ,Kallakurichi district ,Dinakaran ,
× RELATED மினி பஸ்சில் இறந்து கிடந்த மெக்கானிக்