புதுக்கோட்டை, ஜூன் 13: புதுக்கோட்டை திருமயம் சாலை மாலையீட்டில் பிரபல கார் ஷோரூம் உள்ளது. நேற்று மாலை சுமார் 5.15 மணிக்கு ஷோரூமில் உள்ள கார் பழுது நீக்கும் பகுதியில் பணியாளர்கள் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் திடீரென தீப்பிடிக்க தொடங்கியது. இந்த தீ மளமளவென பரவியது.
இதுகுறித்து அங்கிருந்தவர்கள் புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அனைத்தனர். இந்த தீ விபத்தில் ஒரு கார் முழுமையாக எரிந்து சேதமடைந்தது. காருக்கு வெல்டிங் செய்த போது அதில் இருந்து வந்த தீ பொறியால் தீ பரவியது என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post புதுக்கோட்டை கார் ஷோரூமில் தீ விபத்து appeared first on Dinakaran.
