×

கால்நடைகளில் உண்ணிகள் கட்டுப்படுத்தும் முறைகள்

கரூர், டிச. 23: கால்நடைகளில் உண்ணிகளை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தெரிவித்துள்ளதாவது: கால்நடைகளில் நோய் தாக்குதல்களை தொடர்ச்சியாக உண்டு பண்ணுவதில் பெரும் பங்கு வகிப்பது ஒட்டுண்ணிகளாகும். உணவு மற்றும் உறைவிடத்திற்காக ஆடு, மாடு மற்றும் கோழிகளை சார்ந்து வாழும் உயிரினங்களே ஒட்டுண்ணிகளாகும். இவைகளை அக ஒட்டுண்ணி மற்றும் புற ஒட்டுண்ணி என இரண்டு வகைகளாக பிரிக்கலாம். அக ஒட்டுண்ணிகள் பெரும்பாலும் குடல் மற்றும் உள் உறுப்புகளில் காணப்படும், உதாரணமாக, தட்டைப்புழுக்கள், நாடாப்புழுக்கள், உருளைப்புழுக்கள், ஒரணு ஒட்டுண்ணிகளாகும், புற ஒட்டுண்ணிகள், தங்களது உணவு தேவைக்கும், வசிப்பிடத்திற்கும் கால்நடைகளை சார்ந்திருக்கும் பூச்சிகள், ஈக்கள், தெள்ளுப்பூச்சிகள், பேன்கள், உண்ணிகள் மற்றும் சொறி உண்ணிகள் புற ஒட்டுண்ணிகளாக உள்ளன.

உண்ணிகள் மற்றும் உண்ணிகளால் பரவும் நோய்களால் கால்நடைகள் பாதிக்கப்பட்டு அவற்றின் ஆரோக்கியமும், உற்பத்தி திறனும் குறைகிறது. இந்தியாவில் மட்டும் 120க்கும் மேற்பட்ட உண்ணி வகைகள் உள்ளன. கொசுக்களுக்கு அடுத்தபடியாக உண்ணிகள்தான் பல நோய் தொற்று கிருமிகள் பரவ காரணமாக உள்ளது. புற உண்ணிகளால், பூச்சி உண்ணி மற்றும் சிற்றுண்ணிகள் பைலோரியாசிஸ் பரப்புகிறது. ட்ரிப்பனோ சோமியாசியை குதிரை ஈக்கள் பரப்புகிறது. நீல நாக்கு நோயை கொசுக்கள் பரப்புகிறது. தைலேரியாசிஸ், பெபீசியாசிஸ் போன்ற நோய்களை உண்ணிகள் பரப்புகின்றன.

புறஒட்டுண்ணிகளால், கறவை மாடுகளில் பால், ஆடுகளில் இறைச்சி உற்பத்தி குறைவு, உண்ணிக் காய்ச்சல், கலப்பினக் கறவை மாடுகளில் இறப்பு, கால்நடைகளில் சோகை, வளர்ச்சி குறைபாடு, போன்றவைகள் மூலம் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. உண்ணிகள் கால்நடைகளை தாக்குவதால் தோல்களின் தரம் பாதிக்கப்படுகிறது. வேதி மருந்துகள் பயன்படுத்துவதற்கு பதிலாக தேசிய புத்தாக்க நிறுவனத்தில் தொழில்நுட்பமான வேப்பம் மற்றும் நொச்சி இலைகளின் கூட்டுக்கலவை சாறு கால்நடைகளில் உள்ள உண்ணிகளை கட்டுப்படுத்தும் திறனை உறுதி செய்துள்ளது.

கொதிநிலைக்கு சென்ற இரண்டு பொருட்களையும் இயற்கையாக, மெதுவாக குளிரவிட வேண்டும். இரண்டு பாத்திரங்களில் உள்ள சாறு மற்றும் இலைகளை பிரிக்காமல் அதே பாத்திரத்தில 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். 12 மணி நேரம் கழித்து வேப்பம் மற்றும் நொச்சி சாறை வடிகட்டி தனித்தனி குடுவைகளில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டு தயாரிக்க வேண்டும். இவை ஒரு மாதத்திற்கு மருத்துவ குணம் இழக்காமல் இருக்கும். இந்த கூட்டுக் கலவையை, மாடுகளில் மேல் பயன்படுத்த 300 மிலி வேப்பம் சாறு, 100 மிலி நொச்சி சாறும் எடுத்து 3.6 லிட்டர் தண்ணீர் கலக்க வேண்டும். இதுவே உண்ணியை கட்டுப்படுத்தும் மருந்து. மேலும், தயாரிக்கப்பட்ட பல்முலிகை மருந்தை மாடுகளின் மேல் ஸ்பான்சி அல்லது காடா துணி அல்லது மருந்து தெளிக்கும் கருவி கொண்டு தெளிக்கலாம்.

மருந்து தெளிக்கும்போது, உண்ணிகள் அதிகமாக இருக்கும் பகுதிகளான மடி மற்றும் முன்னங்கால் இடையில் மருந்து படுவதை உறுதி செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை என்ற விகிதத்தில் மருந்து தெளிக்க வேண்டும். உண்ணிகள் சாகாமல் இருந்தால் 3வது நாளும் தொடர்ந்து தெளிக்கலாம். மாடுகளுக்கு தெளிக்கும் போது உங்கள் பட்டியில் உள்ள அனைத்து மாடுகளுக்கும் உண்ணி பிரச்னை இருந்தாலும் இல்லாவிட்டாலும் தெளிக்க வேண்டும். மேலும், மாடுகளின் கொட்டகை மற்றும் இதர கட்டுத்தறி பகுதிகளிலும் தெளிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Karur ,Department of Animal Care ,
× RELATED கிருஷ்ணராயபுரம் பகுதியில் மது விற்ற 2பேர் கைது: மாவட்ட கலெக்டர் தகவல்