வருசநாடு, டிச. 23: கண்டமனூர் முதல் கடமலைக்குண்டு வரை உள்ள நெடுஞ்சாலையில் மையக்கோடு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடமலை-மயிலை ஒன்றியத்தில் டூவீலர்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் விபத்து ஏற்பட்டு வந்தது. இதனை தடுப்பதற்கு நெடுஞ்சாலைத் துறை மூலம் மையக் கோடு அமைக்கும் பணியும் வேகத்தடைக்கு வண்ணம் தீட்டும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனால் இப்பகுதியில் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு நெடுஞ்சாலைத்துறை மூலம் விழிப்புணர்வு பணியும் தீவிரமாக ஏற்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு விபத்துகளை தடுப்பதற்காகவும் பொதுமக்கள் நலன் கருதியும், இது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் என நெடுஞ்சாலை துறை மற்றும் சாலை பணியாளர்கள் அதிகாரிகள் தெரிவித்தனர்.
