- விருதுநகர் மாவட்டம்
- மதுரை கார்கோ
- டிஐஜி
- விருதுநகர்
- அபினவ் குமார்
- மதுரை
- மரியபகியம்
- இராஜபாளியம் பெண்கள் காவல் நிலையம்
- மதுரை மாவட்டம்
விருதுநகர், டிச. 23: விருதுநகர், மதுரை மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த 30 இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து மதுரை சரக டிஐஜி அபினவ்குமார் உத்தரவிட்டுள்ளார். இன்ஸ்பெக்டர்கள் இடமாற்ற விபரம் வருமாறு: ராஜபாளையம் மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் மரியபாக்கியம், மதுரை மாவட்டம் பேரையூர் மகளிர் காவல் நிலையத்திற்கும், விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை காவல்நிலைய ஆய்வாளர் நம்பிராஜன், திருமங்கலம் நகர் காவல் நிலையத்திற்கும், வில்லிபுத்தூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மலையரசி, திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்திற்கும், விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் பணிபுரிந்த ராமராஜ், கூடக்கோவில் காவல் நிலையத்திற்கும், திருத்தங்கல் காவல் நிலையத்தில் பணிபுரிந்த நவநீதகிருஷ்ணன், எஸ்.பி.கோட்டை காவல் நிலையத்திற்கும், கீழராஜகுலராமன் காவல் நிலைய ஆய்வாளர் வனிதாமணி, சமயநல்லூர் மகளிர் காவல் நிலையத்திற்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.
ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திலகவதி, மேலூர் மதுவிலக்கு பிரிவிற்கும், திருச்சுழி காவல் ஆய்வாளர் அப்துல்லா, சமயநல்லூர் காவல் நிலையத்திற்கும், எம்.புதுப்பட்டி காவல் ஆய்வாளர் மாரீஸ்வரி, ஊமச்சிகுளம் மகளிர் காவல் நிலையத்திற்கும், இருக்கன்குடி காவல் ஆய்வாளர் செல்வம், பாலமேடு காவல் நிலையத்திற்கும், சாத்தூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ சுலோச்சனா, மேலூர் மகளிர் காவல் நிலையத்திற்கும், வீரசோழன் காவல் ஆய்வாளர் முத்துப்பாண்டி, மேலவளவு காவல் நிலையத்திற்கும், விருதுநகர் மனித ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் சில்வியா ஜாஸ்மீன், திருமங்கலம் மதுவிலக்கு பிரிவுக்கும், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் குருவத்தாய், சாப்டூர் காவல் நிலையத்திற்கும், சாத்தூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ராமலட்சுமி, வில்லூர் காவல் நிலையத்திற்கும்,
சமயநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் இளங்கோவன், வெம்பக்கோட்டை காவல் நிலையத்திற்கும், வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் வளர்மதி, ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்திற்கும், ஊமச்சிகுளம் காவல் ஆய்வாளர் சாந்தி, விருதுநகர் பஜார் காவல் நிலையத்திற்கும், திருமங்கலம் நகர காவல் ஆய்வாளர் சரவணக்குமார், திருத்தங்கல் காவல் நிலையத்திற்கும், ஊமச்சிகுளம் மகளிர் காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி, வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
சமயநல்லூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விமலா, ராஜபாளையம் மகளிர் காவல் நிலையத்திற்கும், மேலூர் மகளிர் காவல் ஆய்வாளர் காஞ்சனா தேவி, நத்தம்பட்டி காவல் நிலையத்திற்கும், திருமங்கலம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லோகேஸ்வரி, அப்பையநாயக்கன்பட்டி காவல் நிலையத்திற்கும், மதுரை மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் அமராவதி, சாத்தூர் மதுவிலக்கு பிரிவுக்கும், திருமங்கலம் மதுவிலக்கு ஆய்வாளர் விமலா, அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலையத்திற்கும்,
கூடக்கோவில் காவல் ஆய்வாளர் சாந்தி, வில்லிபுத்தூர் மகளிர் காவல் நிலையத்திற்கும், விக்கிரமங்கலம் காவல் ஆய்வாளர் பூமா, கீழராஜகுலராமன் காவல் நிலையத்திற்கும், மேலவளவு காவல் ஆய்வாளர் குமாரி, வில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்திற்கும், அருப்புக்கோட்டை காவல் ஆய்வாளர் பாலமுருகன், விருதுநகர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், விருதுநகர் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன், அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
