×

கரூர் மாவட்டத்தில் வாழைத்தார் ரூ.500க்கும் மேல் ஏலம்

கரூர், டிச. 23: கரூர் மாவட்டத்தில் வாழைத்தார்கள் ஏலம், ஏராளமான வியாபாரிகள் ஆர்வத்துடன் ஏலம் எடுத்தனர். கரூர் மாவட்டம், ரத்தின சாலை அருகே உள்ள, ரயில் நிலையம் பகுதியில் தினம் தோறும் வாழைத்தார்கள் ஏலம் விடுவது வழக்கமான ஒன்று.

அவ்வாறு ஏலம் விடும் வாழைப்பழங்கள் நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கரூர் போன்ற மாவட்டங்களில் இருந்து வருகின்றன. இதில் பூம்பழம், ரஸ்தாலி பழம், பச்சைநாடம் பழம், செவ்வாழைப்பழம் போன்ற பழங்கள் இதில் அடங்கும். இதனைத் தொடர்ந்து பச்சைநாடம் பழங்கள் ரூ.400 முதல் மற்ற அனைத்து வகையான வாழைப்பழங்களும் தார் ஒன்றிற்கு ரூ.500க்கும் மேல் விற்பனையானது.

Tags : Karur district ,Karur ,Rattina Road ,
× RELATED கிருஷ்ணராயபுரம் பகுதியில் மது விற்ற 2பேர் கைது: மாவட்ட கலெக்டர் தகவல்