×

பட்டிவீரன்பட்டி சித்தரேவில் வரதராஜ பெருமாள் பூப்பல்லக்கில் பவனி

பட்டிவீரன்பட்டி, மே 17: பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான  வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. திருவிழாவின் 6ம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் மல்லிகை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தார். அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு நின்று சாமி தரிசனம் செய்தனர். இன்று வரதராஜ பெருமாள் ஆஞ்சநேயர் வாகனத்தில் மஞ்சள் நீராடி சன்னதி வந்தடைகிறார். இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயலாளர் வீரசிவபாலன், தலைமை அர்ச்சகர் ராஜ நரசிம்ம அய்யங்கார், விழா குழுவை சேர்ந்த முருகன், மூர்த்தி,  ராமுவேல் புகழேந்திரன், கண்ணன், சுதாகர் மற்றும் ஊர்மக்கள் செய்து வருகின்றனர்.

The post பட்டிவீரன்பட்டி சித்தரேவில் வரதராஜ பெருமாள் பூப்பல்லக்கில் பவனி appeared first on Dinakaran.

Tags : Bhavani ,Varadaraja Perumal ,Poopallak ,Pativeeranpatti Chitare ,Pativeeranpatty ,Chitra festival ,Varadaraja Perumal Temple ,Chitare ,Dinakaran ,Varadaraja Perumal Poopallak ,
× RELATED மினி பஸ்சில் இறந்து கிடந்த மெக்கானிக்