×

3வது முறையாக தேசிய தலைவரான காதர் மொகிதீனுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவராக மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட காதர் மொகிதீனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவராக மூன்றாவது முறையாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காதர் மொகிதீனுக்கு எனது வாழ்த்துகள். பண்பும் அரசியல் முதிர்ச்சியும் மதிக்கூர்மையும் பெற்ற பேரா ஐயா தலைமையில், இந்தியாவின் மதச்சார்பின்மையையும் மத நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-இன் சீரிய மக்கள் பணி சிறக்கட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post 3வது முறையாக தேசிய தலைவரான காதர் மொகிதீனுக்கு முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Kader Mohideen ,Indian Union Muslim League ,Chennai ,M.K. Stalin ,Dinakaran ,
× RELATED ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு ஏன்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்