×

பெருமாள் கோயில் தேரோட்டம்

 

ராமநாதபுரம்: திருப்புல்லாணி ஆதிஜெகநாதர் கோயில் பட்டாபிஷேக ராமருக்கு சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி பத்மாஸனி தாயார் சமேத ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் உள்ள பட்டாபிஷேக ராமர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடந்த மே 2ம் தேதி காலையில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து நாள்தோறும் பல்லக்கு, அனுமன், சிம்மம், 5 தலை நாகர் போன்ற வாகனங்களில் உற்சவ ராமர், சீதா உடன் வெளிப் பிரகார உலா மற்றும் சிறப்பு விஷேச திருமஞ்சனம் நடந்தது.

இதில் மே 8ம் தேதி ராமருக்கு சீதாபிராட்டிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதில் கலந்து கொண்ட பெண்கள் திருமாங்கல்ய நாண் அணிந்து கொண்டனர். தொடர்ந்து நேற்று மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் லெட்சுமணன் உடன் ராமர்,சீதா சிறப்பு அலங்காரத்துடன் கூடிய தேரோட்டம் நான்கு ரதீவீதியில் நடந்தது. பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். பொதுமக்கள் பூ வழங்கி, பழம், தேங்காய் தாம்பூலம் வழங்கி வழிபாடு செய்தனர்.

The post பெருமாள் கோயில் தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Perumal Temple ,Therottam ,Ramanathapuram ,Chithirai festival ,Pattabhisheka Rama ,Thirupullani Adijaganatha Temple ,Pattabhisheka Rama Temple ,Adijaganatha Perumal Temple ,Padmasani ,Perumal Temple Therottam ,
× RELATED ஓய்வூதியர் தின விழா