×

திண்டுக்கல்லில் வேளாண் கண்காட்சி

திண்டுக்கல், மே 5: திண்டுக்கல் வட்டாரத்தில் தேனி மாவட்டம் குள்ளப்புரம் வேளாண் தொழில்நுட்ப கல்லூரியில் விவசாயம் பயிலும் நான்காம் ஆண்டு மாணவர்கள் அபிஷேக், அமுதன்,பரணி,தினேஷ், குகன் சேதுகரசர், ஹரீஸ் சர்மா, மாதேஸ்வரன், மனோஜ் பிரபாகர், மோனீஷ் வர்மன், பிரவீன் குமார், சிவராம் ஆகியோர் கிராமப்புற வேளாண்மை அனுபவ திட்டத்தின் கீழ் தங்கி விவசாயிகள், பொதுமக்களுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் களப்பணியாற்றி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மாணவர்கள் சார்பில் திண்டுக்கல் உழவர் மையத்தில் வேளாண் கண்காட்சி நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குநர் பொபோது துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக வேளாண் உதவி இயக்குநர் ராஜேஷ்வரி, வேளாண் உதவி அலுவலர்கள் கீதா, ராஜு, நாகராஜன், தொட்டப்பன், செந்தில் குமார் கலந்து கொண்டனர். இக்கண்காட்சியில்

இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், நவீன விவசாய தொழில் நுட்பங்களின் செயல்முறை விளக்கங்களையும் காட்சிபடுத்தினர். இகண்காட்சியை தாடிக்கொம்பு, எ.வெள்ளோடு, பெரியக்கோட்டை, கோவிலூர், பாலகிருஷ்ணாபுரம் கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பார்வையிட்டு பயனடைந்தனர். மேலும் கண்காட்சிக்கு வந்த விவசாயிகளுக்கு வெண்டை, மிளகாய், பூசனி ஆகிய விதைகளை வழங்கி இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைத்தனர்.

The post திண்டுக்கல்லில் வேளாண் கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Kullapuram Agricultural Technical College ,Theni ,Abhishek ,Amuthan ,Barani ,Dinesh ,Kugan Sethukarasar ,Haris Sharma ,Matheswaran ,Manoj Prabhakar ,Monish Varman ,Praveen Kumar ,Sivaram… ,
× RELATED ஓய்வூதியர் தின விழா