×

சிறுமி பலி மதுரை பள்ளி உரிமம் ரத்து

மதுரை: மதுரை, கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில் நடந்த கோடைகால சிறப்பு முகாமில் பங்கேற்ற, 4 வயது சிறுமி ஆருத்ரா தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார். அண்ணா நகர் போலீசார் பள்ளி நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து பள்ளி தாளாளர் திவ்யா, உதவியாளர் வைரமணி, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களான மேனகா, ஐஸ்வர்யா, ஜெயபிரியா, சத்யபவானி, சித்ரா, சரிதா ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தாளாளர் திவ்யா, உதவியாளர் வைரமணி கைதாயினர். சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது. முதன்மை கல்வி அதிகாரியின் பரிந்துரையின்பேரில், பள்ளிக்கான அனுமதியை ரத்து செய்து கலெக்டர் சங்கீதா நேற்று உத்தரவிட்டார்.

The post சிறுமி பலி மதுரை பள்ளி உரிமம் ரத்து appeared first on Dinakaran.

Tags : Madurai ,Aruthra ,KK Nagar ,Anna Nagar ,Dinakaran ,
× RELATED ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு ஏன்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்