×

விஷ சாராய வழக்கு 3 மாதத்தில் முடிக்கப்படும்: ஐகோர்ட்டில் சிபிஐ உறுதி

சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கின் விசாரணை 3 மாதங்களில் முடிக்கப்படும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் சிபிஐ உறுதி அளித்துள்ளது. விஷ சாராய வழக்கில் கைதுசெய்யப்பட்ட கன்னுக்குட்டி, தாமோதரன் ஜாமின் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தாமோதரன், கன்னுக்குட்டிக்கு ஜாமின் வழங்கக் கூடாது என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கில் எத்தனை பேர் விசாரணையில் உள்ளனர் என்பது குறித்து சிபிஐ பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட நிலையில், 3 மாதத்தில் விஷ சாராய வழக்கு முடிக்கப்படும் என ஐகோர்ட்டில் சிபிஐ தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

The post விஷ சாராய வழக்கு 3 மாதத்தில் முடிக்கப்படும்: ஐகோர்ட்டில் சிபிஐ உறுதி appeared first on Dinakaran.

Tags : Chennai ,CBI ,Chennai High Court ,Khanukti ,Court of Justice ,Damodharan Jamin Kori ,iCourt ,Dinakaran ,
× RELATED நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 49வது...