- திருவாடானி
- திருவாடானி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- கௌரவ விரிவுரையாளர்கள் சங்கம்
- ஜனாதிபதி
- ராமமூர்த்தி
திருவாடானை, ஏப்.10: திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் சார்பில் பணி நிரந்தரம் செய்யக்கோரி, கல்லூரி வாசல் முன்பு இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கெளரவ விரிவுரையாளர்கள் சங்க தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தங்களது கைகளை உயர்த்தி கோஷங்களை எழுப்பி 20க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் விரிவுரையாளர்கள் சங்கச் செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.
The post பணி நிரந்தரம் கோரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
