×

ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

* கலெக்டர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்தார்

* ஆர்வமுள்ள துறையை தேர்வு செய்ய ஆலோசனை

திருவண்ணாமலை : ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் என் கல்லூரி கனவு திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, கலெக்டர் தர்ப்பகராஜ் பேசியதாவது:

கல்வி மட்டும் தான் வாழ்வில் நம்மை உயர்த்தும். நகர பகுதி மாணவர்களைவிட, கிராமப்புற மாணவர்களுக்கு கல்விக்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. எனவே, அதற்காக கூடுதல் முயற்சிகளை கிராமப்புற மாணவர்கள் மேற்கொள்கின்றனர்.

மேலும், அரசு சார்பில் மாணவர்களின் உயர்கல்விக்கு பல்வேறு வழிகாட்டுதல்கள் செய்யப்படுகிறது. அதன்படி, உயர்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

உயர்கல்விக்கான வாய்ப்புகளை அறிந்து, அதற்கான ஆலோசனைகளை பெற்று திறமையும் ஆர்வமும் உள்ள துறைகளை தேர்ந்தெடுத்து உயர்கல்வி படிக்க வேண்டும். உயர்கல்வியில் சேருவதற்கான வழிமுறைகள் தெரியாவிட்டால், அனுபவம் உள்ள ஆசிரியர்கள் அல்லது அந்த துறைைய சேர்ந்தவர்களிடம் ஆலோசனை பெறலாம்.

நமக்கான திறமை, லட்சியம் என்ன என்பதை மற்றவர்கள் தீர்மானிக்காமல், நாம்தான் முடிவு செய்ய வேண்டும். எனவே, மாணவர்கள் தங்கள் திறமையை அறிந்து உயர்கல்வியை தேர்ந்தெடுக்க வேண்டும்.மொழி என்பது அறிவு அல்ல.

எந்த மொழியாக இருந்தாலும் கற்றுக் கொள்ளலாம். நாம் வாழ்க்கையில் உயர வேண்டும். சமூகத்தில் நமக்கான இடம் என்ன என்பதை உணர்ந்து அடைய வேண்டும். மேலும், கேள்வி கேட்க தயங்கக்கூடாது. தயக்கம் தான் நமது வீழ்ச்சிக்கான முதல் படி. எனவே, அச்சத்தை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், டிஆர்ஓ ராம்பிரதீபன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சாந்தி, பழங்குடியினர் நல திட்ட அலுவலர் கலைச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Adi Dravidar Welfare Department ,Collector ,Tharpukaraj ,Thiruvannamalai ,Tiruvannamalai ,Dinakaran ,
× RELATED ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு ஏன்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்