×

கந்தர்வகோட்டை நகரத்தை சுற்றி பார்த்த இத்தாலி நாட்டவர்

 

கந்தர்வகோட்டை, மார்ச் 23: கந்தர்வகோட்டை நகரை சுற்றிப் பார்த்த இத்தாலி நாட்டவர் வியர்ந்து போனார்கள். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நகரை கடந்து தஞ்சை பெரியகோவில், புன்னைநல்லூர் மாரியம்மன், சரஸ்வதி மஹால் மற்றும் பல இடங்களை சுற்றிப் பார்க்க இத்தாலி நாட்டு சுற்றுலாப் பயணிகள் வழிகாட்டி உடன் கடந்து செல்ல முயன்ற போது இப்பகுதியில் உள்ள கடைவீதிகளில் நாட்டு காய்கறிகள், தார்பூசணி, அரை நெல்லி, இலந்தை பழம், அதனை வாங்க நின்ற மக்களை கண்டும் வியந்து காரை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு கடைவீதி முழுவதும் சுற்றி பார்த்து ஆனந்தம் பட்டனர்.

கடையில் உள்ளவர்களிடம் காய்கறி விலை தரம், விலை கேட்டு வியந்தனர் மக்களையும், இடங்களையும், கடைகளையும் படம் எடுத்து மகிழ்த்தனர். பள்ளி மாணவிகளிடம் பேசி இப்பகுதியில் சிறப்புகளை கேட்டு அறிந்தனர். இப்பகுதி மக்களிடம் கைகுலுக்கி மகிழ்ச்சியை பகிர்த்து கொண்டனர். அவர்கள் கூறுகையில் அழகிய தமிழகம் என்று கூறியது அங்கு இருந்த அனைவரும் மகிழ்ச்சி அளிந்தது.

The post கந்தர்வகோட்டை நகரத்தை சுற்றி பார்த்த இத்தாலி நாட்டவர் appeared first on Dinakaran.

Tags : Kandarvakottai ,Pudukkottai ,Thanjavur Periyakovil ,Punnainallur Mariamman ,Saraswathi Mahal ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு