- கணித கிளப் விழா
- பனாயூர் பள்ளி
- குளத்தூர்
- பனையூர் இந்து நாடார் நடுநிலைப்பள்ளி
- தமிழ்நாடு கிராம வங்கி கிளை
- மேலாளர்
- மனோரஞ்சித்
- தலைமையாசிரியை
- மரியா அனிதா
- ஆசிரியர்
- திலகசெல்வி
குளத்தூர், மார்ச் 23:குளத்தூர் அருகேயுள்ள பனையூர் இந்து நாடார் நடுநிலைப்பள்ளியில் கணித மன்ற விழா தமிழ்நாடு கிராம வங்கியின் கிளை மேலாளர் மனோரஞ்சித் தலைமையில் நடந்தது. தலைமை ஆசிரியை மரிய அனிதா முன்னிலை வகித்தார். ஆசிரியை திலகசெல்வி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற வங்கி காசாளர் வள்ளி, உதவியாளர் மாரீஸ்வரன், கணிதத்தை எப்படி கற்கவேண்டும்? கணிதம் கற்பதால் வாழ்க்கையில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து பேசினர்.
இதைத்தொடர்ந்து நடந்த கணித மன்றத்தில் மாணவர்கள் கணிதம் குறித்த பாடல்களுடன் விழிப்புணர்வு நாடகம் நடித்து காட்டினர். கணிதத்தை எளிதாக புரிந்து கொள்ளும் விதமாக கவிதை வாயிலாக வாசித்தனர். இதையடுத்து நடந்த கணிதப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர் அற்புதசகாயராஜா நன்றி கூறினார். ஏற்பாடுகளை அனைத்து ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
The post பனையூர் பள்ளியில் கணித மன்ற விழா appeared first on Dinakaran.
