×

நத்தம் வத்திபட்டியில் கூடுதல் வகுப்பறை கட்ட பூமி பூஜை

நத்தம், மார்ச் 15: நத்தம் அருகே ரெட்டியபட்டி ஊராட்சி, வத்திபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.98 லட்சம் மதிப்பில் புதியதாக 5 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட பூமிபூஜை நடந்தது.திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார் தலைமை வகித்து பணிகளை துவங்கி வைத்தார். இதில் முன்னாள் ஊராட்சி தலைவர் பவுர், பள்ளி தலைமையாசிரியை மணிமேகலை, ஆசிரியர்கள் அயூப்கான், உதயகுமார், பெருமாள், சோலைமலை மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post நத்தம் வத்திபட்டியில் கூடுதல் வகுப்பறை கட்ட பூமி பூஜை appeared first on Dinakaran.

Tags : Bhoomi Puja ,Natham Vathipatti ,Natham ,Government Higher Secondary School ,Vathipatti, Retiyapatti Panchayat ,DMK South Union ,Rathinakumar ,
× RELATED மினி பஸ்சில் இறந்து கிடந்த மெக்கானிக்