×

உதயநிதி மீது புதிய வழக்கு பதிவு செய்ய தடை

டெல்லி: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது புதிய வழக்கு பதிவு செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மராட்டியம், பீகார், கர்நாடகா, ஜம்மு காஷ்மீரில் உதயநிதிக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளை ஐகோர்ட்டுக்கு மாற்றக் கோரி துணை முதலமைச்சர் உதயநிதி தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற அனுமதியின்றி சனாதன வழக்கில் உதயநிதி மீது புதிய வழக்கு பதியக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதி; வழக்கில் அனைத்து எதிர்மனுதாரர்களும் பதிலளிக்க நோட்டீஸ் வழங்கினார்.

The post உதயநிதி மீது புதிய வழக்கு பதிவு செய்ய தடை appeared first on Dinakaran.

Tags : Udhayanidhi ,Delhi ,Supreme Court ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Maharashtra ,Bihar ,Karnataka ,Jammu and ,Kashmir ,Court ,
× RELATED ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வை...