பாட்னா: மகரசங்கராந்தியை முன்னிட்டு தேஜ் பிரதாப் அளித்த விருந்தில் லாலு பிரசாத் யாதவ் நேற்று கலந்து கொண்டார். லாலு பிரசாத் யாதவின் மகனும் பீகார் எம்எல்ஏவுமாக இருப்பவர் தேஜ் பிரதாப் யாதவ். ஏற்கனவே திருமணமானவரான தேஜ் பிரதாப் அனுஷ்கா யாதவ் என்ற பெண்ணுடன் உறவில் இருப்பதாக கடந்த மே மாதம் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தேஜ் பிரதாப்பை ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கி லாலு பிரசாத் நடவடிக்கை எடுத்தார்.
பின்னர் ஜனசக்தி ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தொடங்கிய தேஜ் பிரதாப் யாதவ், பீகார் பேரவை தேர்தலில் மஹூவா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவரது கட்சியினரும் தோல்வி அடைந்தனர். இந்நிலையில் மகரசங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு, தன் தந்தை லாலு பிரசாத் யாதவ், சகோதரர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை தஹி-சுரா விருந்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று கொண்டு தாஹி சுரா விருந்தில் லாலு பிரசாத் யாதவ் கலந்து கொண்டார்.
