×

ஐ-பேக் ரெய்டு விவகாரம் திரிணாமுல் காங். மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி: அமலாக்கத்துறை மனு ஒத்திவைப்பு

 

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றும் அரசியல் ஆலோசனை நிறுவனமான ஐபேக் அலுவலகம் மற்றும் அதன் இயக்குநர் பிரதீக் ஜெயினின் வீட்டில் கடந்த 8ம் தேதி அமலாக்கத்துறை நிலக்கரி ஊழல் தொடர்பாக திடீர் சோதனை நடத்தியது. அப்போது, மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேரடியாக சென்று தேர்தல் உத்தி தொடர்பான ஆவணங்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, ரெய்டின் போது அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ள தனிப்பட்ட மற்றும் அரசியல் தரவுகளை பாதுகாக்க உத்தரவிக் கோரி திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று நீதிபதி சுவ்ரா கோஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ, ‘‘2 இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டில் எந்த பொருட்களும் ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை’’ என்றார். இதைக் கேட்ட நீதிபதி, இந்த மனுவில் மேற்கொண்டு பரிசீலீக்க எதுவும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார். இதே போல, ரெய்டு விவகாரத்தில் மாநில அரசின் தலையீடு குறித்து சிபிஐ விசாரணை கேட்டு அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி கோஷ் ஒத்திவைத்தார்.

* மம்தாவுக்கு பெரும் அவமானம்

மேற்கு வங்க பாஜ இணை பொறுப்பாளர் அமித் மால்வியா தனது எக்ஸ் பதிவில், ‘‘இது மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட பெரும் அவமானம். இது அவரது அப்பட்டமான தலையீட்டிற்கு ஒரு கடுமையான கண்டனம். இந்தச் சம்பவம் சட்டத்தின் மீதான அவரது அவமதிப்பையும், ஊழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற அவரது அவநம்பிக்கையையும் அம்பலப்படுத்துகிறது. அரசியல் நாடகங்களால் அரசியலமைப்பு அதிகாரிகளை அச்சுறுத்த முடியாது என்பதை உயர் நீதிமன்றம் தெளிவாக உணர்த்தியுள்ளது’’ என கூறி உள்ளார்.

Tags : I-PAC ,Trinamool Congress' ,Enforcement Directorate ,Kolkata ,Trinamool Congress party ,West Bengal ,Prateek Jain ,
× RELATED குருநானக் விழாவிற்காக சென்று பாக். நபரை மணந்த இந்திய பெண் கைது