×

ஜனநாயக அமைப்புகளை பாதுகாக்க போராடுவோம்ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆதரவு வாக்காளர்களை நீக்க பாஜ சதி: காங். குற்றச்சாட்டு

 

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “ராஜஸ்தானின் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியில் இருந்தும் 4,000 முதல் 5,000 வரையிலான காங்கிரஸ் ஆதரவு வாக்காளர்களை நீக்கம் செய்யுமாறு முதல்வர் இல்லத்தில் இருந்து தொகுதி வாரியான தரவுகளுடன் பென்டிரைவ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஜெய்பூர் வருகைக்கு பிறகு இந்த தரவுகள் வழங்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் இறுதி ஆட்சேபனை காலக்கெடுவுக்கு முன், காங்கிரஸ் வாக்குகளை நீக்க துணைப்பிரிவு அதிகாரி அலுவலகங்களில் ஏராளமான படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த சதியை தடுக்க காங்கிரஸ் பூத் ஏஜென்டுகள், மாவட்ட நிர்வாகங்களுடன் உடனே ஒருங்கிணைந்து, செல்லுபடியாகும் வாக்குகள் எதுவும் நீக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த செயல்முறைகளை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். ஜனநாயக அமைப்புகளை பாதுகாக்க காங்கிரஸ் உறுதியாக போராடும்” என இவ்வாறு கூறினார்.

Tags : BJP ,Congress ,Rajasthan ,Jaipur ,president ,Govind Singh Todasra ,Chief Minister ,House ,
× RELATED குருநானக் விழாவிற்காக சென்று பாக். நபரை மணந்த இந்திய பெண் கைது