புதுடெல்லி: நீட் முதுநிலை சேர்க்கைக்கான தகுதி மதிப்பெண் விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான(எம்டி, எம்எஸ்) நீட் முதுகலை தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி நடந்தது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுதிய நிலையில், ஆகஸ்ட் 19ம் தேதி முடிவுகள் வௌியாகின.
அதைத்தொடர்ந்து மாணவர் சேர்க்ககை்கான கலந்தாய்வு தொடங்கப்பட்டு, 2 சுற்று கலந்தாண்களான 800ல் பொதுப்பிரிவினருக்கு 276 மதிப்பெண்கள், ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 235 மதிப்பெண்கள் தகுதி மதிப்பெண்களாக(கட் ஆஃப்) நிர்ணயிக்கப்பட்டிருந்தன. இதுவரை 2 சுற்று கலந்தாய்வு முடிந்துள்ள போதிலும், நாடு முழுவதும் 18,000 இடங்கள் காலியாக உள்ளன. இதை நிரப்பும் விதமாக ஒன்றிய அரசின் ஒப்புதல் பெற்று அடுத்த சுற்று கலந்தாய்வுக்கான தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மருத்துவ அறிவியலின் தேசிய தேர்வு வாரியம் நேற்று வௌியிட்ட அறிவிப்பில், “முதுநிலை நீட் 2025 சேர்க்கைக்கான தகுதி சதவீதங்கள் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி, பொதுப்பிரிவினருக்கான தகுதி மதிப்பெண் 50-லிருந்து 7-ஆகவும், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான தகுதி மதிப்பெண் 40 சதவீதத்தில் இருந்து பூஜ்யமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாற்று திறனாளிகளுக்கான தகுதி மதிப்பெண் 45-லிருந்து 5-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
