×

உ.பி. வாக்காளர் பட்டியலில் 4.5 கோடி பேர் நீக்கமா? ஆம்ஆத்மி குற்றச்சாட்டால் பரபரப்பு

 

லக்னோ: எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு உத்தரபிரதேசத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் ஜனவரி 6 ஆம் தேதி வெளியிடப்பட்டது. உபி வாக்காளர் பட்டியலில் 12.55 கோடி வாக்காளர்கள் தற்போது உள்ளனர். 2.89 கோடி பேரின் பெயர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில் உபி வாக்காளர் பட்டியலில் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு மாதத்தில் 4.5 கோடிக்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஆம் ஆத்மி கட்சி நேற்று குற்றம் சாட்டி உள்ளது. உ.பி.யின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் இதுபற்றி கூறியதாவது:

உபியில் யோகி அரசும், தேர்தல் ஆணைய அதிகாரிகளும் எஸ்ஐஆர் என்ற பெயரில் உ.பி.யின் வரலாற்றில் மிகப்பெரிய தேர்தல் மோசடியை திட்டமிட்டுள்ளனர். இதனால் 2025 டிசம்பரில் 17 கோடியாக இருந்த உபி வாக்காளர் எண்ணிக்கை 12.55 கோடியாகக் குறைந்தது. இதன் விளைவாக 4.5 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் காணாமல் போய் விட்டனர். இது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் மீதான நேரடித் தாக்குதல். இது ஒரு பிழை அல்ல, ஆனால் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டிய ஒரு திட்டமிட்ட மோசடி.

4.5 கோடி வாக்காளர்களை நீக்கிய பிறகு, உபி முதல்வர் யோகி 1.77 லட்சம் வாக்குச் சாவடிகளில் ஒவ்வொன்றிலும் 200 வாக்குகளைச் சேர்க்க உத்தரவிட்டுள்ளார். இதன் விளைவாக கிட்டத்தட்ட 3.5 கோடி செயற்கை வாக்குகள் உருவாக்கப்பட உள்ளன. பீகார், அரியானா, டெல்லி, மும்பை மற்றும் ராஜஸ்தானில் இருந்து மக்களை அழைத்து வந்து பாஜ போலி வாக்காளர்களை உருவாக்கி வருகிறது.

ஒரு பாஜ எம்எல்ஏ தனது தொகுதியில் 18,000 வாக்குகள் சேர்க்கப்பட்டதாக ஒப்புக்கொண்டார். 46 லட்சம் வாக்காளர்கள் இறந்துவிட்டனர், 25 லட்சம் பேர் போலி வாக்காளர்கள் என்ற தேர்தல் ஆணையம் இதுபற்றிய முழுமையான பதிவுகளை வெளியிட வேண்டும். இந்த மோசடி குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும். இந்த விவகாரம் பற்றி தலைமை தேர்தல் கமிஷனரிடமும், நாடாளுமன்றத்திலும் குரல் எழுப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : UP ,AAP ,Lucknow ,Uttar Pradesh ,SIR ,Election Commission ,
× RELATED குருநானக் விழாவிற்காக சென்று பாக். நபரை மணந்த இந்திய பெண் கைது