- மரியகிரி மலங்கரா கத்தோலிக்க கல்லூரி
- திருவட்டார்
- முதல்வர்
- ரெவ்.
- அருள்தாஸ்
- பீட்டர் அமலாதாஸ்
- கன்னியாகுமாரி
- நெல்லை
- திருவனந்தபுரம்...
திருவட்டார், பிப்.25: மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் ஆண்டு விழா நிகழ்ச்சியை தொடர்ந்து கல்லூரிகளுக்கு இடையேயான கலை போட்டிகள் நடந்தன. கல்லூரி தாளாளர் அருட்தந்தை அருள்தாஸ் தலைமை வகித்தார். முதல்வர் பீட்டர் அமலதாஸ் முன்னிலை வகித்தார். போட்டிகளில் கன்னியாகுமரி, நெல்லை, திருவனந்தபுரம் மாவட்டங்களில் இருந்து பல்வேறு கல்லூரிகளின் மாணவர்கள் பங்கேற்றனர். குழு பாடல், மேற்கத்திய நடனம், நாடோடி நடனம், ஓவியம், மைம் போட்டிகள் உள்ளிட்டவை நடைபெற்றன. அஞ்சுகிராமம் ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி முதலிடத்தையும், சுங்கான்கடை புனித சேவியர் பொறியியல் கல்லூரி இரண்டாம் இடத்தையும் பெற்றன. வெற்றி பெற்ற கல்லூரி அணியினருக்கு சான்றிதழ், கேடயம் மற்றும் பணப் பரிசு வழங்கப்பட்டது.
The post மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் கலைப்போட்டி appeared first on Dinakaran.
