- காங்கிரஸ்
- உதன்குடி
- அகில இந்திய காங்கிரஸ்
- மாநில காங்கிரஸ்
- ஜனாதிபதி
- செல்வப்பெருந்தகை
- பீட்டர் அல்போன்ஸ்
- தின மலர்
உடன்குடி, ஜன. 30: உடன்குடியில் காங்கிரஸ் சார்பில் வார்டு கமிட்டி அமைக்கப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் தீர்மானத்தின்படி மாநில காங். தலைவர் செல்வப்பெருந்தகை, கிராம காங்கிரஸ் மறுசீரமைப்பு பணிகளை தீவிரப்படுத்த மாநில ஒருங்கிணைப்பாளராக பீட்டர் அல்போன்சை நியமனம் செய்தார். தொடர்ந்து நேற்று திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் சிவசுப்பிரமணியன் தலைமையில் நகர காங்கிரஸ் தலைவர் முத்து முன்னிலையில் உடன்குடி பேரூராட்சி 4வது வார்டு தலைவராக கோபாலகிருஷ்ணன், பொருளாளராக பிரபாகர், செயலாளர்களாக ஆபிரகாம், சாமுவேல் ஜெபசிங் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் திருச்செந்தூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் தனுஷ், பொதுச்செயலாளர் ஹென்றி மற்றும் ஜெபராஜ், கோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post உடன்குடியில் காங். வார்டு கமிட்டி மறுசீரமைப்பு பணி appeared first on Dinakaran.
