தஞ்சாவூர், ஜன. 29: எல்.ஐ.சி. முகவர்கள் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என லிக்காய் சங்கத்திடம் முரசொலி எம்.பி உறுதி அளித்தார். எல்.ஐ.சி.,யில் குறைந்த பட்ச காப்பீடு ஒரு லட்சம் மீண்டும் கொண்டு வர வேண்டும். பாலிசி நுழைவு வயதை 60 வயதாக உயர்த்த வேண்டும். முகவர் கமிஷன் குறைப்பை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி 1 கோடி கையெழுத்து பெற்று மத்திய நிதிஅமைச்சரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி பாராளுமன்றம் முன்பு முகவர்கள் வரும் 11ம் தேதி தர்ணா போராட்டத்திலும் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதற்காக கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது.
அந்த வகையில் லிக்காய் மத்திய, மாநிலக்குழு முடிவின்படி நேற்று தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி எம்.பி. முரசொலியை, லிக்காய் மாநில செயலாளர் ராஜா, தஞ்சை கோட்ட தலைமை நிலைய தலைவர் தங்கமணி, செயலாளர் சம்பத், சிஏபி முன்னணி முகவர் அசோகன் மற்றும் கிளை நிர்வாகிகள் சந்தித்து தங்களது கோரிக்கைகளை எடுத்துக் கூறினர். அப்போது, 1 கோடி கையெழுத்து படிவத்தில் முரசொலி எம்.பி., கையெழுத்து போட்டதுடன் மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதுவதாகவும், பாராளுமன்ற கூட்டத்தில் ஆதரவு குரல் கொடுப்பதாகவும் உறுதி அளித்தார்.
The post எல்.ஐ.சி. முகவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பாராளுமன்றத்தில் குரல்கொடுப்பேன்: முரசொலி எம்.பி உறுதி appeared first on Dinakaran.
