×

தர்மபுரி அஞ்சல் பிரிப்பகத்தை சேலத்துடன் இணைக்க எதிர்ப்பு

 

தர்மபுரி, டிச.9: தர்மபுரி அஞ்சல் பிரிப்பகத்தை, சேலத்துடன் இணைக்கக்கூடாது என்று மாவட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், இந்திய அஞ்சல் துறை தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து தர்மபுரி அஞ்சல் நிலையமும், இதற்கான அஞ்சல் பிரிப்பகம் கடந்த 1982ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும், மாவட்டத்திற்குள் இருக்கும் தபால்கள் மறுதினமே உரிய முகவரிக்கு கிடைகிறது. தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் கிளை அஞ்சல் நிலையங்களில், பிற்பகல் 2 மணி வரைதான் பதிவு தபால் செய்கின்றனர்.

இதன் அவசர பதிவு தபால்கள் அனுப்ப தர்மபுரி பிரிப்பகத்தில் மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை பதிவு தபால்கள், பார்சல்கள் பெறுகிறார்கள். இதனால் பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி-கல்லூரி மாணவ, -மாணவிகள், வழக்கறிஞர்கள், வணிகர்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியோர் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, இந்த அஞ்சல் பிரிப்பகத்தினை சேலத்துடன் இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தர்மபுரி மாவட்ட மக்களை கடும் பாதிப்பு உண்டாகும். அதனால் இந்த நடவடிக்கையை உடனே ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post தர்மபுரி அஞ்சல் பிரிப்பகத்தை சேலத்துடன் இணைக்க எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,division ,Salem ,Dharmapuri district ,Dharmapuri post ,Indian Postal Department ,Dharmapuri post division ,Dinakaran ,
× RELATED சேலம் அருகே பரபரப்பு மாணவிகளிடம்...