×

ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொத்தனார் மாயம்

நாகர்கோவில், நவ. 14: தக்கலை கிருஷ்ணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மரிய ஜாண் போஸ்கோ(63). கட்டிட தொழிலாளி. இவர் உடல்நலம் சரியில்லாமல் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த மரிய ஜாண் போஸ்கோ திடீரென மாயமானார். இவரை பல இடங்களில் தேடியும், எந்த தகவலும் இல்லை. இது குறித்து மரிய ஜாண் போஸ்கோ மகன் மரிய ஷாஜி ஆசாரிபள்ளம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொத்தனார் மாயம் appeared first on Dinakaran.

Tags : Kothanar Mayam ,Asaripallam Hospital ,Nagercoil ,Maria John Bosco ,Thakala Krishnamangalam ,Asaripallam Medical College Hospital ,
× RELATED மினி பஸ்சில் இறந்து கிடந்த மெக்கானிக்