சென்னை: டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வில் தகுதிகளின் அடிப்படையில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: mஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் (பட்டயம் / தொழிற்பயிற்சி நிலை) தேர்வில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள், தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் 27.2.2026 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கான கணினி வழித்திற சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள், ஓட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீட்டு விதி, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளின் அடிப்படையில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் 24.3.2026 அன்று (நேற்று) வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
