×

விஜய் மற்றும் அருண்ராஜ் ஸ்டிக்கர் ஒட்டி திருச்செங்கோட்டில் வீடு வீடாக தவெக பாத்திரம் விநியோகம்: அதிகாரிகள் வந்ததால் ஓட்டம்

திருச்செங்கோடு: தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில், முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அதற்காக அவர் திருச்செங்கோடு வாக்காளர்களை கவரும் விதத்தில், பல்வேறு பரிசு பொருட்களை கொடுத்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டேல் நகரில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த விஜய் மற்றும் அருண்ராஜ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், நேற்று திருச்செங்கோடு அருகே உள்ள முரசுக்குட்டை பகுதியில் பறக்கும்படையினர் சோதனையிட வருவதை பார்த்த சிலர், தங்களிடம் இருந்த மூட்டைகளை தூக்கி வீசி விட்டு தப்பியோடி விட்டனர். அந்த மூட்டைகளில் விஜய், அருண்ராஜ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட சில்வர் பாத்திரங்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஆர்டிஓ லெனினிடம் ஒப்படைத்தனர்.

நிறைய பரிசு பொருட்களை ஒரே இடத்தில் பதுக்கினால் பிரச்னை வரும் என்று 10 அல்லது 15 பாத்திரங்களை ஒவ்வொரு தனி நபரிடமும் கொடுத்து, இரவோடு இரவாக வீடுகளில் கொண்டு சேர்க்க, தவெக முயற்சி எடுத்து வருகிறது. இந்த புது டெக்னிக்கை அக்கட்சி முன்னெடுத்துள்ளது தேர்தல் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Vijay ,Arunraj ,Thiruchengode ,Thaveka ,IRS ,Tamil Nadu Vetrikashakham ,Patel… ,
× RELATED டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த...