×

யூடியூபர் சங்கர் சரணடையாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: இடைக்கால ஜாமீன் காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் யூடியூபர் சங்கர் சரணடையவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சினிமா தயாரிப்பாளர் ஆயிஷா என்பவர், தன்னை அவதூறாக பேசி மிரட்டி ரூ.2 லட்சம் பறித்துவிட்டதாக கூறி சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் யூடியூபர் சங்கர் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த டிசம்பர் 13ம் தேதி போலீசார் சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து, தனது மகனை ஜாமீனில் விடுவிக்கக் கோரி சங்கரின் தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அடங்கிய அமர்வு யூடியூபர் சங்கருக்கு நிபந்தனை அடிப்படையில் மார்ச் 25ம் ேததி (இன்று) வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.  நிபந்தனையில், மனுதாரர் தனது பாஸ்போர்ட்டை சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும், வழக்கில் உள்ள சாட்சிகளை கலைக்கும் வகையிலும், விசாரணைக்கு இடையூறு செய்யும் வகையிலும் செயல்படக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த யூடியூபர் சங்கர் நிபந்தனைகளை கடைபிடிக்காமல் தொடர்ந்து அவதூறு கருத்துகளை தனது யூடியூபில் பதிவிட்டு வருவதாகவும், மருத்துவ காரணங்களை காட்டி ஜாமீன் பெற்று அதை மீறியுள்ளதாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் கூறி, அவருக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி காவல்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன், ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சங்கர் ஜாமீன் நிபந்தனைகளை மீறியுள்ளார் என்று காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மருத்துவ சிகிச்சையை காரணமாக கூறி ஜாமீன் பெற்றுவிட்டு நிபந்தனைகளுக்கு எதிராக செயல்பட்டுள்ளார். இந்த மனுவுக்கு சங்கர் பதில் தரவேண்டும். அரசு மருத்துவ வாரியத்தில் ஆஜராகி சான்றிதழ் பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தனது மகனுக்கு விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளை ரத்து செய்யக்கோரி யூடியூபர் சங்கரின் தாய் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் சங்கரின் தாய் தாக்கல் செய்த மனுவுக்கு சைதாப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்தார்.

மனுவில், யூடியூபர் சங்கர் மீது காஞ்சிபுரம் எஸ்.வி.சத்திரம் காவல் நிலையம், திருவல்லிக்கேணி காவல் நிலையம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 2ம் தேதி ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆஜரான யூடியூபர் சங்கரை பரிசோதித்த மருத்துவ குழு, மருத்துவ சிகிச்சை மற்றும் உடல் பரிசோதனையில் சங்கருக்கு சர்க்கரை நோய், உயர் அழுத்தம், தமனியில் பிரச்னை உள்ளது.

அவருக்கு தேவையான தொடர் சிகிச்சை தரப்பட வேண்டும். பெரிய அளவிலான நோய் எதுவும் இல்லை என்று அறிக்கை தந்துள்ளது. ஆனால், அவருக்கு சிறப்பு சிகிச்சை தேவை என்று மனுதாரர் கூறியுள்ளார். சட்டத்திலிருந்து தப்பிப்பதற்காக நீதிமன்றத்தை அவசர அவசரமாக நாடியுள்ளார். உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை மீறியுள்ளதால் அவரது இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

நேற்று தீர்ப்பளித்தனர். தீர்ப்பில், யூடியூபர் சங்கரின் தாய் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு, இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஆகிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று கூறியுள்ளனர். அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, யூடியூபர் சங்கருக்கு தரப்பட்ட இடைக்கால ஜாமீன் மார்ச் 25ம் தேதியுடன் முடிகிறது. அவர் சரணடைய வேண்டும்.

இல்லையென்றால் நடவடிக்கை தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரினார். இதைக்கேட்ட நீதிபதிகள்ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மேல் உங்களின் கவுன்ட்டவுன் தொடர்கிறது. சரணடையாவிட்டால் சட்டப்படி நீங்கள் நடவடிக்கை எடுக்கலாம் என்றனர். அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், யூடியூபர் சங்கர் குஜராத்தில் இருந்துகொண்டு வீடியோக்களை தொடர்ந்து போடுகிறார் என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், காவல்துறையால் எந்த நிலையிலும் நடவடிக்கை எடுக்க முடியுமே என்று தெரிவித்தனர்.

Tags : Shankar ,High Court ,Chennai ,Madras High Court ,Ayesha ,
× RELATED டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த...