தமிழ்நாட்டில் கடந்த 2021ல் யுபிஎஸ்சி தேர்வில் 27 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதை தொடர்ந்து 2022ல் 36 பேர், 2023ல் 47 பேர், 2024ல் 57 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் யுபிஎஸ்சி தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது. குறிப்பாக, நான் முதல்வன் மூலம் பயிற்சி பெற்ற பலர் ஐஏஎஸ், ஐபிஎஸ்சாகி உள்ளனர். இத்திட்டத்தின் மூலம் ஐஏஎஸ் ஆன பிரசாந்த் நேற்று நடந்த விழாவில் பேசியதாவது: 2022ல் மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பை முடித்தேன். இந்த மேடை 2 வகையில் முக்கியமானது. படிப்பை முடித்தபோது 40 தங்க பதக்கங்களை முதல்வரிடமிருந்து வாங்கினேன்.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் படித்தேன். இதன் மூலம் மாதம் வரும் ரூ.7500 தொகை, மெயின்ஸ் முடித்ததும் வழங்கக்கூடிய ரூ.25000 என ஏறக்குறைய ரூ.1.5 லட்சம் வந்தது. அப்போது முதல்வர் சொன்னது படிப்பில்மட்டுமே கவனம் செலுத்துங்கள், உங்களுக்கு தேவையான உதவிகளைஅரசு செய்யும் என்றார். நான் தேர்ச்சி பெற்றதற்கு இவ்வாறான உதவி, ஊக்கமே காரணம். 2024ல் இந்திய அளவில் 78வது இடத்தை பிடித்தேன். தற்போது நான் ஐஏஎஸ் ஆபீசர். அம்மா, பாட்டியின் ஊக்கம் போலவே அரசின் ஊக்கம் மற்றும் ஊக்கத்தொகை என்னை இந்த அளவிற்கு வளர்த்துள்ளது.
