×

தொடர் மழையால் புழல் ஏரி 100% நிரம்பியது

புழல்: சென்னை உள்ளிட்ட பகுதிகளில், 2026ம் ஆண்டின் முதல் நாளில் ெபய்த மழையால், புழல் ஏரி 100 சதவீதம் நிரம்பி, முழு கொள்ளளவை எட்டியுள்ளது. முன் எப்போதும் இல்லாத வகையில் ஆண்டின் முதல் நாளில் பெய்த மழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை காரணமாக புழல் ஏரி முழுமையாக நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு, மழை ஓய்ந்ததும் பின்னர் நிறுத்தப்பட்டது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 3300 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் நீர்மட்டம் 21.2 உயரத்தில் நிரம்பி உள்ளது. ஏரிக்கு 215 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

சென்னை குடிநீருக்காக ஏரியில் இருந்து 184 கன அடி திறக்கப்பட்டு வருகிறது. புழல் ஏரி 24வது நாளாக 100% நிரம்பி முழு கொள்ளளவில் நீடித்து வரும் நிலையில் அலை, அலையாய் ததும்பி கடல்போல ரம்மியமாக காட்சியளிக்கிறது. முன் எப்போதும் இல்லாத வகையில், ஆண்டின் முதல் நாளில் புழல் ஏரி முழு கொள்ளளவில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Puzhal Lake ,Puzhal ,Chennai ,
× RELATED ஓபிஎஸ் வருவார் செங்ஸ் ‘தவம்’