திருத்துறைப்பூண்டி, டிச. 25: திருத்துறைப்பூண்டியில் ஒன்றிய அரசை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூறு நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் நோக்கில் கொண்டு வந்த புதிய சட்டத்தை திரும்ப பெற வலிறுத்தியும் இதற்கு ஒத்து ஊதும் அதிமுகவை கண்டித்தும் அனைத்து ஒன்றியங்களிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எம்எல்ஏ மாரிமுத்து தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.பாண்டியன், நகர்மன்ற துணை தலைவர் ஜெயப்பிரகாஷ், திமுகஒன்றிய செயலாளர் பிரகாஷ், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் ஜவஹர், நகர செயலாளர் கார்த்திக்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர்கள் காரல்மார்க்ஸ், முருகதாஸ், நகர செயலாளர் கோபு, விசிக ஒன்றிய செயலாளர்கள் தலைக்காடு ரஜினி, செந்தில், விசிக நகர செயலாளர் ஜான் மைக்கேல் மற்றும் கூட்டணி கட்சிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, சார்பு அணி, கிளை நிர்வாகிகள் மற்றும் நூறு நாள் வேலை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
