×

திருவாரூரில் திமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா

திருவாரூர், டிச. 25: திருவாரூரில் திருவாரூர் மாவட்ட திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பில் மாபெரும் கிறிஸ்துமஸ் பெருவிழா நேற்று நடைபெற்றது. மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளர் தாஜுதீன் முன்னதாக வரவேற்று பேசினார். திருவாரூர் நகர செயலாளர் வாரை பிரகாஷ், கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் கலியபெருமாள், பேரூர் செயலாளர் பூண்டி கலைவேந்தன், மாவட்டத் தலைவர் அப்துல் ரஜாக், மற்றும் நிர்வாகிகள் நவாபுதீன், நவாஸ்கான், அல் அமீன், ஷாஜகான், நைனா முகமது ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

இதில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். மேலும், முன்னாள் அமைச்சர் மதிவாணன், திருவாரூர் பங்குத்தந்தை ஜெனரல்டு, பெரும்பனையூர் பங்குத்தந்தை லூர்து சேவியர், கரையூர் பங்குத்தந்தை அந்தோணி, பனைவிளாகம் பங்கு தந்தை அந்தோணி ராஜ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். இறுதியில் மாவட்ட துணை தலைவர் செபாஸ் நன்றி கூறினார்.

 

Tags : DMK ,Christmas ,Tiruvarur ,DMK Minority Welfare Unit ,District ,Minority Welfare Unit ,Thajudeen ,City ,Secretary… ,
× RELATED மினி பஸ்சில் இறந்து கிடந்த மெக்கானிக்