×

அம்மாபேட்டை பேரூராட்சி பகுதியில் தீ விபத்தில் வீடு சேதம் பாதிக்கப்பட்டவருக்கு நலத்திட்ட உதவி

தஞ்சாவூர், டிச.25: அம்மாபேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு சேதம் அடைந்த வீட்டின் உரிமையாளருக்கு பேரூராட்சி மன்ற தலைவர் நலத்திட்டத்தை உதவிகளை வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அம்மாபேட்டை மார்வாடி தெரு பகுதியில் வசித்து வருபவர் அஞ்சம்மாள். இவரது வீடு மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு சேதம் அடைந்தது.

இதனையடுத்து தீ விபத்து ஏற்பட்டு வாழ்வாதாரம் இழந்து இருக்கும் அஞ்சமாளுக்கு அம்மாபேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் தியாக ரமேஷ் நலத்திட்ட உதவியாக ரூ.8,000, அரிசி மற்றும் புடவை உள்ளிட்டவைகளை நேரில் சென்று வழங்கினார். இந்த நிகழ்வில் அம்மாபேட்டை பேரூர் கழகத் துணைச் செயலாளர் வீரமணி, அசோக் குமார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் கலந்து கொண்டனர்.

 

Tags : Ammapettai Panchayat ,Thanjavur ,Panchayat ,Anjammal ,Marwadi Street ,Papanasam taluka ,Ammapettai, Thanjavur district.… ,
× RELATED மினி பஸ்சில் இறந்து கிடந்த மெக்கானிக்