- அலுவல் மொழி சட்ட வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி
- புதுக்கோட்டை
- அதிகாரப்பூர்வ மொழி சட்ட வாரம்
- புதுக்கோட்டை மாநகராட்சி பழைய பேருந்து நிலையம்
- தமிழ் அபிவிருத்தி திணைக்களம்
- அலுவல் மொழி சட்ட வாரம்…
புதுக்கோட்டை, டிச. 25: புதுக்கோட்டையில் ஆட்சி மொழி சட்ட வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டை மாநகராட்சி பழைய பேருந்து நிலையத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சி மொழி சட்டவாரத்தை முன்னிட்டு ஆட்சி மொழி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மேளதாளங்கள் முழங்க மானாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, புலியாட்டம், கட்டைக்கால் ஆட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மேலும் திருவள்ளுவர், பாரதமாதா, பாரதியார் வேடங்கள் அணிந்து வந்தவர்கள், ஆட்சி மொழி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
