×

களக்காடு அருகே சொத்து தகராறில் வாலிபர் மீது

தாக்குதல் களக்காடு,டிச.25: களக்காடு அருகே வாலிபரை தாக்கிய அவரது அத்தை உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். களக்காடு அருகேயுள்ள சாலைப்புதூரை சேர்ந்தவர் பாப்பா கிருஷ்ணன் மகன் சுந்தரவேல் (27). விவசாயியான இவர் தற்போது மீனவன் குளத்தில் உள்ள தோட்டத்தில் தங்கியுள்ளார். அவருக்கும், அவரது அத்தையான சொர்ணம் என்பவருக்கும் சொத்து தொடர்பாக தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று தோட்டத்திற்கு சென்ற சொர்ணம், அவரது கணவர் அன்பு, உறவினர் பரமசிவன் ஆகிய 3 பேரும் சேர்ந்து சுந்தரவேலை கம்பால் தாக்கினர். இதில் காயமடைந்த அவர் களக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின் பேரில் களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து சொர்ணம் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

Tags : Kalakkadu ,Papa Krishnan ,Sundaravel ,Salaiputhur ,Meenavan Kulam ,
× RELATED மினி பஸ்சில் இறந்து கிடந்த மெக்கானிக்