- பண்ருட்டி
- காடாம்புலியூர்
- சப்-இன்ஸ்பெக்டர்
- வேல்முருகன்
- பண்ருட்டி-கும்பகோணம்
- சத்தியமூர்த்தி
- மாளிகம்பட்டு தெற்குத் தெரு
பண்ருட்டி, டிச. 25: பண்ரட்டியை அடுத்த காடாம்புலியூர் உதவி ஆய்வாளர் வேல்முருகன் நேற்று போலீசாருடன் பண்ருட்டி-கும்பகோணம் மெயின் ரோடு சாத்திப்பட்டு சாலையில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மாளிகம்பட்டு தெற்கு தெருவை சேர்ந்த சத்தியமூர்த்தி(24) என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது சத்தியமூர்த்தி, உதவி ஆய்வாளரை அசிங்கமாக திட்டி உங்களுக்கு வாகனத் தணிக்கை செய்வதே வேலையாக போய்விட்டது என்று கூறி உதவி ஆய்வாளரை கத்தியால் குத்த முயற்சி செய்தார். சக காவலர்கள் தடுத்து சத்தியமூர்த்தியை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்குப்பதிவுந்து கைது செய்தனர்.
