பண்ருட்டி, டிச. 25: பண்ருட்டி அடுத்த கருக்கைதெற்கு தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்(57). இவரது மனைவி பத்மாவதி(53). இவர்களுக்கு திருமணம் ஆகி 35 வருடங்கள் ஆன நிலையில், சம்பவத்தன்று கணவன், மனைவி இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் மனைவியை அசிங்கமாக திட்டி தலையில் கல்லால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார். இது குறித்த புகாரின் பேரில், காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
