×

அஷ்டவாராகி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

காரிமங்கலம், டிச.25: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி தானப்ப கவுண்டர் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அஷ்டவாராகி அம்மன் கோயிலில், வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. இதில் பக்தர்கள் பங்கேற்று தேங்காய் தீபம் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைவர் கேபி அன்பழகன் எம்எல்ஏ, தாளாளர் மல்லிகா அன்பழகன், முதன்மை நிர்வாக இயக்குனர் வித்யா ரவி சங்கர், நிர்வாக அலுவலர் தனபால், அர்ச்சகர் நீலகண்ட சாஸ்திரி மற்றும் பலர் செய்திருந்தனர்.

Tags : Ashtavaragi Amman Temple ,Karimangalam ,Keragodalli Thanappa Counter Matriculation School ,Dharmapuri ,Valarpirai Panchami ,
× RELATED மினி பஸ்சில் இறந்து கிடந்த மெக்கானிக்