×

விவசாயிகள் குறைதீர் கூட்டம்: டிச.19ம் தேதி நடக்கிறது

திண்டுக்கல், டிச. 16: திண்டுக்கல் மாவட்ட் கலெக்டர் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் டிச.19ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. அன்றைய கூட்டத்தில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள், அரசின் மானியத்திட்டங்கள், மானியத்தில் கிடைக்கும் வேளாண் கருவிகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூட நடவடிக்கைகள், கால்நடை பராமரிப்பு குறித்த தொழில்நுட்பங்கள், பட்டுப்புழு வளர்ப்பு மூலம் கூடுதல் வருமானம் பெற ஆலோசனைகள், முன்னோடி வங்கி மற்றும் கூட்டுறவு விவசாய கடன் சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் சம்பந்தப்பட்ட விளக்கங்களும் அளிக்கப்படவுள்ளது. கூட்டத்தில், விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த கோரிக்கைகளுக்கு மனு அளித்து தீர்வு காணலாம். என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : Dindigul ,Dindigul District Collector ,Dindigul Collector ,
× RELATED அதீத பனி மூட்டத்தின்போது பாதுகாப்பான விமான சேவை அளிப்பது எப்படி?