சென்னை, டிச.17:அய்யப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் சூர்யா சுந்திரம் (69). இவர் கடந்த ஆண்டு ஜூன் 6ம் தேதி, குடும்பத்துடன் சென்னையில் இருந்து பாலக்காடு செல்லும் ரயிலில் பயணித்துள்ளார். இந்த ரயில் சேலத்தில் நின்று மீண்டும் புறப்பட்ட போது, இவர் வைத்திருந்த பையில் ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான தங்க நகை மாயமானது. புகாரின்பேரில் சேலம் ரயில்வே போலீசார் விசாரித்தனர். அதில், திருச்சி ராம்ஜி நகர் கொத்தமங்கலம் கோணார்குலத்தை சேர்ந்த முத்துராமன் (எ) ரித்தின் (46) என்பவர் திருட்டில் ஈடுப்டடது தெரிந்தது. அவரை கைது செய்தனர். இந்த வழக்கு 3வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் முத்துகிருஷ்ண முரளிதரன், நகை திருடிய முத்துராமன்னுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
